'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் தான் நடிகைகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அங்கெல்லாம் நடிகைகள் பெறும் சம்பளத்தை சாண்டல்வுட், மல்லுவுட் ஆகியவற்றில் உள்ள முன்னணி நடிகர்கள் கூட பெறுவதில்லை என்றும் சொல்வார்கள்.
கடந்த சில நாட்களாகவே சில முன்னணி பாலிவுட் நடிகைகள் புதிய படங்களுக்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் ஹீரோயினான கரீனா கபூர் ஹிந்தியில் உருவாக உள்ள 'சீதா' படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. அடுத்து 'தி பேமிலி மேன் 2' வெப்தொடரில் நடிக்க 3 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாகச் சொன்னார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க ஆலியா பட்டிற்கு நாளொன்றுக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்து தீபிகா படுகோனேவின் புதிய சம்பளம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தீபிகா கதாநாயகியாக நடிக்க 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுதான் இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிக சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
ஹீரோக்களுக்கு 100 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் போது ஒரு ஹீரோயினுக்கு 8 கோடி என்பதே அதிக சம்பளம் எனச் சொல்வது சரியா ?