2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
குறும்படம் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதென்ன சிறிய படம் என்கிறீர்களா. மொத்தமே ஐந்து நொடிகள் மட்டுமே ஒளிபரப்பாகும் ‛பி பிரிட்டி' என்ற படத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் 2005ல் ஏழு நொடிகள் கொண்ட சோல்சர் பாய் என்ற படத்தை அமெரிக்கர் ஒருவர் எடுத்திருந்தார். அப்படமே நேற்று வரை உலக சாதனையில் இடம் பிடித்திருந்தது. தற்போது அச்சாதனையை நம்ம தஞ்சையை சேர்ந்தவர் முறியடித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள இளங்காடு எனது சொந்த ஊர். சென்னையில் திரைப்பட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். நான் இயக்கிய, ‛பி பிரிட்டி' (Be Pretty) படம் உலகின் சிறிய திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இப்படம் முககவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுத்துள்ளேன். சமூகத்தோடு கை கோர்ப்பது ஒரு படைப்பாளியாக எனக்கு இருக்கும் பொறுப்பாக கருதுகிறேன். படத்தின் போஸ்டரை தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். படத்தை முதல்வர் வெளியிட வேண்டியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.