2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருபவர்களுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு ஆலோசனை சொல்கிறார்.
“என் தோழி ஒருவர் என்னிடம் சொன்னதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயத்தில் அல்லது பணம் அல்லது அறிவு தருபவற்றில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். வேறு ஒன்றும் தேவையில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் தனது அழகான சிரிப்பு மூலம் பல ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் மூலம் இங்குள்ள ரசிகர்களுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நடிப்பாரா என்று நம் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்துவது போலத் தெரிகிறது.