போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
மீண்டும் கோகிலா, கல்யாணராமன், கடல் மீன்கள் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இவர் தனது இறுதி சடங்கு எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மகனும், இயக்குனருமான ஜி.என்.குமாரவேலன் கூறியிருப்பதாவது:
அப்பாவை நேசித்தவர்கள் இத்தனை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறைசாற்றுகிறது. என் இழப்பைத் தங்கள் வீட்டு இழப்பாகக் கருதி, அப்பா இறந்த செய்தியைப் பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி.
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்றுக் கொண்ட ஒரு விஷயம். அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாமே அழகாக யோசித்து, நேர்த்தியாகத் திட்டமிடுவது அப்பாவின் பலம். படப்பிடிப்பை அப்பா, திட்டமிடும் விதத்தை நேரில் பார்த்துப் பிரமித்த எனக்கு, அவர் தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறியபொழுது, மகனாக நொறுங்கிப் போனேன்.
எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி நடத்த வேண்டும், இன்னும் என்னென்னமோ சொன்னார். எனக்குத்தான் கேட்க மனதளவில் தைரியமில்லை. அவர் சொன்னது நடக்கவில்லை. அவர் விரும்பியது நடக்கவில்லை. பாழாய்ப் போன கொரோனா, உயிர்களை மட்டும் பறிக்கவில்லை, மனிதர்களின் கடைசி நிமிடங்களையும் கொன்று விடுகிறது.
தந்தையுடன் பயணித்தவர்கள், பணியாற்றியவர்கள், பழகியவர்கள் யாரையும் அவரது கடைசி முகத்தை பார்க்க முடியாமல் செய்து விட்டது கொரோனா. நேரில் வர முடியாவிட்டாலும், அப்பாவைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போன அவர்கள் வலியை உணர்கிறேன். இன்பத்தில் ஒன்று கூடவும், துன்பத்தில் தோள் கொடுக்கவாவது கொரோனா ஒழிய வேண்டும். இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.