இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
விஜய் இயக்கும் தலைவி படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்த படத்தை அரசு எப்படி அணுகும், வெளியீட்டில் சிக்கல் வருமா? தியேட்டரில் வெளியாகுமா?, ஓடிடியில் வெளியாகுமா? என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தலைவி படத்தை முடித்த கையோடு சத்தமே இல்லாமல் ஓடிடி தளத்திற்கென்று ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.
இந்த படத்திற்கு அவர் அக்டோபர் 31 : லேடீஸ் நைட் என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும், இதனை அவரே தயாரித்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது. ஒரு இரவில் நடப்பது மாதிரியான இந்த திகில் கதையில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகி உள்ள இந்த படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியிடப்பட போகிறது என்று தெரியவில்லை. முக்கிய ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கிறது.