எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தி பேமிலிமேன் 2 வெப்சீரிஸ் வெளியாகி விட்டதை அடுத்து தான் ஏற்கனவே நடித்து வந்த சகுந்தலம் புராண படத்தில் கவனத்தை திருப்பியிருக்கிறார் சமந்தா. குணசேகர் இயக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ்மோகன் நாயகனாக நடிக்கிறார்.
மேலும், சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு மே 10ம் தேதி வரை சுமார் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று தீவிரமானபோது படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமந்தா தயங்கியதால் பல நாட்களில் சமந்தா இல்லாமலேயே காட்சிகள் படமாகி வந்தது. அதோடு இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 10 நாட்கள் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் கூடிய சீக்கிரமே மீண்டும் சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் சமந்தா. அதோடு, வழக்கமான படப்பிடிப்புகளை போல் அல்லாமல் காலை 6 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை மட்டுமே படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளதாம்.