பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதற்குப் பிந்தைய பாதிப்புகளால் உடல்நலம் குறைந்து செப்டம்பர் 25ம் தேதியன்று மரணம் அடைந்தார். அவரது மறைவால் கோடிக்கணக்கான ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அவரது மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அன்று அவருடைய பாடல்களைப் பற்றி பலரும் பல விதங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர் மீதான தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினார்கள்.
அவர் மரணமடைந்த பிறகு வரும் முதல் பிறந்த நாள் இன்று. அவர் மறைந்தாலும் அவரது குரலால் வசீகரிக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் இன்று அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளை மேலும் பகிர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவிட்டு வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
மறைந்த பின்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்கள் ஒரு சிலரே. அதில் எஸ்பிபியும் ஒருவர் என்பது அவரது குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியைத் தரும் என்பது உண்மை.