பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை |

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் இப்படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
பிரபாஸின் அடுத்த வெளியீடாக இந்தப் படம் தான் வர உள்ளது. ஆனால், இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை படக்குழுவினர் மறுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ராதேஷ்யாம்' படத்தைத் தியேட்டர்களில் பார்க்கும் போதுதான் அதன் விஷுவல் பிரம்மாண்டத்தை ரசிக்க முடியும். நிலைமை சரியாகும் வரை காத்திருந்து அதன் பின் படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்களாம்.
இருப்பினும் பல ஓடிடி நிறுவனங்களை பெரிய தொகை தருகிறோம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆசை காட்டி வருவதாகச் சொல்கிறார்கள்.