அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பிரபல ஹாலிவுட் நடிகையான கிம் கார்தஷியன் எந்த அளவுக்கு கவர்ச்சி மழையில் ரசிகர்களை நனைய வைக்கிறாரோ, அந்த அளவுக்கு அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது இந்து மத சின்னங்களில் ஒன்றான ஓம்' என்கிற எழுத்து பொறித்த காதணிகளை அணிந்து கொண்டு, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியட்டுள்ளார் கிம் கார்த்ஷியன். இது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உங்கள் காதுகளுக்கு அணிகலனாக அணிவதற்கு எங்கள் மத சின்னம் தான் கிடைத்ததா..?, எங்கள் கலாச்சாரம் பற்றி என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விதண்டாவாதம் பேசும் சிலரோ, ஒம் என்கிற சின்னத்தை கழுத்தில் அணிந்து கொள்ளும்போது எந்த பிரச்சனையும் இல்லை என்கிறபோது காதில் அணிவதற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு என கிம் கார்தஷியனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.