ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
தற்போது தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை-3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் தில்ராஜு தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இத்தாலியில் நடத்தி விட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பியுள்ளனர்.
ராஷி கண்ணா கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் மீண்டும் பரவிக் கொண்டிருந்த நேரம் தான் தேங்க்யூ படப்பிடிப்பிற்காக இத்தாலிக்கு புறப்பட்டு சென்றோம். முதலில் இத்தாலிக்கு செல்லவே பயந்தேன். என்றாலும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் செட்டில் இருக்கும்போது இத்தாலி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதை பின்பற்றி படப்பிடிப்பு நடந்தது. சீக்கிரம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை நடித்தோம். அப்படி நடித்து முடித்து விட்டு இந்தியா திரும்பியிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.