தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் நடித்து ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் மலேஷியா டூ அம்னீஷியா. இப்படத்தில் நடித்த கருணாகரன் நடிப்பிற்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இதுப்பற்றி அவர் கூறுகையில், "இயக்குனர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். உப்பு கருவாடு படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. மலேசியா to அம்னீஷியா படத்தில் கூட அவரது கைவண்ணம் நிரவி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்த படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும்.
இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்டு உள்ள அற்புதமான படமாகும். வைபவ், வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர் சார், மயில் சாமி சார், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம் மறக்க முடியாதது" என்கிறார் கருணாகரன்.