பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ். தமிழில் கவுரவம் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக இவரது நடிப்பில் படம் வெளியாகத நிலையில் சில தினங்களுக்கு முன் புதிய படம் குறித்த அறிவிப்பு வந்தது. இதில் நாயகியாக அனு இம்மானுவல் நடிக்கிறார். ராகேஷ் சசி இயக்குகிறார். ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு பிரேம கதன்டா என பெயரிட்டு இப்பேது இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு புதிய டிரெண்ட்டை உருவாக்கி உள்ளனர். டோலிவுட்டில் இப்படியாக இரண்டு ப்ர்ஸ்ட் லுக் வெளியாவது இதுவே முதன்முறை. முன்னதாக, இதேபடத்துக்காக இரண்டு ப்ரீ லுக் போஸ்டர்களை அவர் வெளியிட்டார். அதிலும் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருந்தார். இப்படம் ரொமான்ட்டிக் படமாக தயாராகிறது. அதேசமயம் தற்கால உறவுச்சிக்கல்கள் பற்றியும் பேசுகிறது. இன்று வெளியிடப்பட்ட இரண்டு போஸ்டர்களில் ஒன்று அழுத்தமான உணர்வுகளைக் கடத்துவதாகவும், இன்னொன்று நாயகன், நாயகியின் யதார்த்தமான மிரர் செல்பி புகைப்படம் கொண்டதாகவும் உள்ளது.




