நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள பிக்பாஸ் 3வது சீசனை மோகன்லால் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். கேரளாவில் கொரோனா கால ஊரடங்கு விதிகள் கடுமையாக இருந்ததால் சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது.
நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பணியாற்றிய 6 தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகளால் பிக் பாஸ் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டதால் இறுதி சுற்றை நடத்த முடியாமலும், வெற்றியாளர் என்பதை அறிவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இனி மறுபடப்பிடிப்பு நடத்தவும் வாய்ப்பில்லை. இதனால் இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையில் வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ஒரு டீசரையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இதன்படி ஆன்லைனில் மே 24 முதல் 29 வரையில் பார்வையாளர்கள், ரசிகர்கள் ஓட்டுகளை செலுத்தலாம். இறுதிப் போட்டியாளர்களாக 8 பேர் உள்ள நிலையில் மக்களிடம் பெறும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்பட இருக்கிறார்கள்.