வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஹன்சிகா நடித்து முடித்துள்ள அவரது 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் கடந்த 2 ஆண்டுகளாக வெளிவரவில்லை. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஜலீல் படத்துக்கு தடைகேட்டு நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தை இயக்கியதற்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தை தராமல் ஏமாற்றி விட்டனர். எனக்கு தெரியாமல் பல காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளனர். அதனால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் படத்தின் பணிகள் முடிந்து விட்டாக இயக்குனர் ஜலீல் கூறும் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
படத்தின் இயக்குனர் தெடர்ந்த வழக்கில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்கவில்லை. நோட்டீஸ் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டது, இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளோம். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.