பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சில குடும்பங்களில் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே கொரோனா தொற்று பரவி வீடுகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களால் வீடுகளில் சமைக்கவும் முடியாது. ஹோட்டல்களில் இருந்து வாங்கியும் சாப்பிட முடியாது.
இப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்காக பலர் நியாய விலையில் உணவுகளை வழங்கி வருகின்றனர். அதே சமயம் சில பிரபலங்கள் சேவை மனப்பான்மையில் அவர்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவுகளை இலவசமாகவே வழங்கி வருகிறார்கள்.
டிவி நடிகை சரண்யா, அவருடைய வீட்டில் சமையல் செய்து அவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உணவுகளைக் கொடுத்து வருகிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன். இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
சில நல்ல உள்ளங்கள் இப்படி சில சேவைகளை மக்களுக்கு வழங்கி வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.