ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள தமன்னாவின் முதல் தமிழ் வெப் சீரிஸான 'நவம்பர் ஸ்டோரி' இன்று வெளியாகி உள்ளது. இதுவரை திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தமன்னா முதன் முறையாக தெலுங்கில் கடந்த மாதம் வெளிவந்த '11த் ஹவர்' என்ற வெப் சீரிஸில் நடித்தார்.
அடுத்து அவர் தமிழில் நடித்துள்ள 'நவம்பர் ஸ்டோரி' இன்று வெளியாகி உள்ளது. இந்திரா சுப்ரமணியம் எழுதி இயக்கியுள்ள இத்தொடரில் அனுராதா என்ற கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். ஜிஎம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ் மற்றும் பலரும் நடித்துள்ளார்கள். க்ரைம் த்ரில்லர் தொடரான இது ஏழு பாகங்களாக இடம் பெற்றுள்ளது.
தமிழில் முன்னணி நடிகைகளும் நடிக்கும் வெப்சீரிஸ்கள் தற்போது வர ஆரம்பித்துள்ளன. இதற்கு முன்பு காஜல் அகர்வால் நடித்த 'லைவ் டெலிகாஸ்ட்' வெளிவந்தது. காஜல், தமன்னாவைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகைகள் வெப் சீரிஸ்களில் நடிக்கத் தயாராக இருக்கிறார்களாம்.