லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல இளம் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், மனைவி சிந்துஜா(38) கொரோனா நோயால் உயிர் இழந்தார்
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமையாளர். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர். அந்த நட்பின் காரணமாக தனது தயாரிப்பில் கனா என்ற படத்தை அவருக்கு இயக்கும் வாய்ப்பை தந்தார். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தற்போது உதயநிதியை வைத்து ஹிந்தி படமான ஆர்டிக்கிள் 15யின் தமிழ் ரீ-மேக்கை இயக்கி வருகிறார்.
அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா. இருவரும் காதலித்து, திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவருமே கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிந்துஜா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி சிந்துஜா நேற்றிரவு உயிரிழந்தார். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
![]() |
அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடல் சென்னையில் உள்ள மின்மயானம் ஒன்றில் வைத்து தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இவரின் மறைவு செய்தி அறிந்து நேரடியாக மயானத்திற்கே வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன். அதேப்போன்று நடிகர் உதயநிதி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அருண் ராஜா காமராஜ், தன் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவற்காக தகுந்த பாதுகாப்பு உடன் கவச உடை அணிந்து மயானத்திற்கு வந்திருந்தார்.
அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மயானத்தில் கண்ணீர் மல்க நிற்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. பலரும், இந்த வீடியோவை பார்த்து, ‛‛என்ன கொடுமை இது, என்ன வாழ்க்கை டா இது. பார்க்கவே மனது கஷ்டமாக உள்ளது. அருண் ராஜா காமராஜ் இந்த துயரத்தில் இருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.