டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக திரையுலகிலும் பல்வேறு உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. அந்தவகையில் தெலுங்கு நடிகரும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான டிஎன்ஆர் என அழைக்கப்படும் தும்மலா நரசிம்ம ரெட்டி என்பவர் நேற்று முன் தினம் (மே-10) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
திரையுலக பிரபலங்கள் அனைவருடனும் சகஜமாக பேசி பேட்டி எடுத்ததன் மூலம் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நட்பாக இருந்தவர் தான் டி.என்.ஆர். அதனால் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி டிஎன்ஆரின் மறைவு தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சிரஞ்சீவி,. மேலும் அவரது வீட்டிற்கே தனது தரப்பு நபரை அனுப்பி, உடனடி செலவுக்கு பயன்படும் விதமாக அவரது மனைவியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார்.