சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் ஏற்பட்ட கிரேன் விபத்து, கொரோனா பாதிப்பு ஆகிய காரணங்களால் மீண்டும் ஆரம்பமாகாமல் இருந்தது.
ஆனால், அதற்குப் பிறகும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகாமல் இழுத்துக் கொண்டே போனது. இயக்குனர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர்களிருவருக்கும் இருக்கும் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.
நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இருவரும் பேசியும் தீர்வு வரவில்லை. இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்து தனது சினிமா பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க கமல் முடிவெடுத்துள்ளாராம். அவர் ஏற்கெனவே 'விக்ரம்' படத்தை அறிவித்துவிட்டாலும், 'இந்தியன் 2' படத்தை முடித்துவிடுவோம் என அதற்கான பஞ்சாயத்தில் இறங்கிவிட்டதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹாசனே பஞ்சாயத்தில் இறங்கிய பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய இரு தரப்பினரும் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து படத்தை மீண்டும் ஆரம்பித்து முடித்து வைக்க வேண்டும் என கமல் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
விரைவில் 'இந்தியன் 2' விவகாரம் முடிவுக்கு வரும் என்று சொல்கிறார்கள்.