'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” |
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடால் நாடே அமைதி இழந்து தவிக்கிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள், இந்தியாவுக்கு இயன்ற அளவில் உதவ வேண்டும் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜேம்ஸ் மெக்கே, வில் ஸ்மித், நிக் ஜோனஸ், கேட்டி பெர்ரி உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் இந்தியாவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் இந்தியாவுக்காக குரல் கொடுக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. புதிய பாதிப்புகள் கடந்த 5 நாட்களாக புதிய உச்சம் தொட்டு வருகின்றன. நீங்கள் நிதி உதவி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களால் முடிந்த தளத்தில் விழிப்புணர்வை உருவாக்க குரல் கொடுங்கள். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எக்ஸ் மென், ஸ்பிலிட் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜேம்ஸ் மெக்அவாய். அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் இப்போது இந்தியாவின் நிலை தெரியும். இப்போது மிக மோசமாக இருக்கிறது. அங்கு மிகப்பெரிய நெருக்கடி நிலவி வருகிறது. போதுமான ஆக்சிஜன் இல்லை. உங்களிடம் பணம் இருந்தால் நல்லது. இல்லையென்றால், இதுகுறித்து மற்றவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் இதற்கு கவனம் கொடுத்தாலே போதும். இந்தியாவின் நிலை நன்றாக ஆகும் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். என்று பேசியுள்ளார். நன்கொடை செலுத்த வசதியாக அற்கான லிங்கையும் வெளியிட்டுள்ளார்.