'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

யாமிருக்க பயமே படத்தை இயக்கியவர் டீகே. அந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அவர் இயக்க ஒப்பந்தமான படம் காட்டேரி. இதில் வைபவ், வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் 3 ஆண்டுகளாகியும் வெளிவரவில்லை. அதன்பிறகு டீகே இயக்கிய கவலை வேண்டாம் படம் வெற்றி பெறவில்லை.
இதனால் மீண்டும் தனது பழைய ஹாரர் காமெடி பாணிக்கே திரும்பி விட்டார். தற்போது சத்தமே இல்லாமல் தனது புதிய படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி ஐயர், நொய்ரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நொய்ரிகா ஈரான் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி. இந்தியில் நடித்திருக்கும் அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.
தற்போது இதன் படப்பிடிப்புகளை 2வது அலை தொடங்கும் முன்பே ஒரே மூச்சில் முடித்து விட்டார் டீகே . தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் . விரைவில் படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. படத்தை நல்ல விலைக்கு வாங்க ஓடிடி தளங்கள் முன் வருகிறதாம். இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.




