சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சலார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை 'கே ஜி எப்' பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154வது படத்திலும், கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.