புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலின் தோழியாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2 படங்களில் நடித்தார். கடைசியாக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்தார். தற்போது ஐஸ்வர்யா கையில் ஒரு படம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இப்போது கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி அதை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இதனால் இப்போது அங்கும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.