வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் |
நயன்தாரா, காஜல் அகர்வால், ஸ்ரேயா, அஞ்சலி உள்ளிட்ட நடிகைகள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளார் இயக்குனர் கோபிசந்த் மாலினேனி. இவர் தான் ரவிதேஜாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த பல்பு, கிராக் போன்ற படங்களை இயக்கியவர்.
தெலுங்கு சினிமாவின் ராசியான நடிகை என்ற பட்டியலில் இருந்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார். அதனால் இந்த நேரத்தில் பாலகிருஷ்ணா போன்ற 60 வயது ஹீரோக்களுடன் ஸ்ருதிஹாசன் நடிப்பாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.
அதேசமயம், ஸ்ருதிஹாசனுக்கு கோபிசந்த் மாலினேனி இயக்கிய கிராக் படம் வெற்றி பெற்று டோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதால், இந்த வாய்ப்பை ஸ்ருதியால் நிராகரிக்க முடியாது. கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்கிற கருத்துக்களும் டோலிவுட்டில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. என்றாலும், ஸ்ருதிஹாசனின் முடிவே இறுதியானது.