அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. நடிகரும், திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். இடையில் சில விழிப்புணர்வு குறும்படங்கள், இசை ஆல்பங்களை இயக்கினார்.
தற்போது மீண்டும் படம் இயக்கத் தயாராகி விட்டார். இதில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசும், நடிகை லிஸியின் மகள் கல்யாணி பிரியதர்ஷனும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது. ரொமாண்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படமாக இது உருவாக இருக்கிறது.