ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது |

தமிழில் விஜய் 65ஆவது படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஆச்சார்யா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான பூஜா ஹெக்டே அந்த தகவலையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டவர், தன்னுடன் தொடர்பில் இருந்த வர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார் பூஜா ஹெக்டே. மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் தனது புதிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் மந்தமாகவோ பலவீனத்தின் அறிகுறி எதுவுமே அவரிடத்தில் இல்லை. எப்போதும் போலவே உற்சாகமாக காணப்படுகிறார். அதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவே இந்த உற்சாகமான போட்டோவை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.