இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் அஜித்குமாருக்கு இன்று 50வது பிறந்தநாள் ஆகும். இன்றைய தினத்தில் தான் வலிமை படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக வெளியிடவில்லை என்று முன்னதாகவே போனிகபூர் அறிவித்து விட்டார்.
மேலும், இன்று அஜித்துக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் 50ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனும், ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து தான் நடித்திருந்த காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில், ‛‛நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துக்கள். பேரன்புடன் சிவகார்த்திகேயன்'' என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.