''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.
இன்றைய அஜித் பிறந்தநாள் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கான கொண்டாட்டமாக இல்லாமல் இருப்பதுதான் உண்மை. இன்று 'வலிமை அப்டேட்' கண்டிப்பாக வந்துவிடும் என அவர்கள் காத்திருந்தார்கள். ஆனால், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த அப்டேட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். நிலைமை சீரடையும் வரை 'வலிமை அப்டேட்' இருக்காது என்பதும் உண்மை. இந்த 'வலிமை அப்டேட்' என்பது பலவிதங்களில் எப்படி பரப்பாக இருந்தது என்பது ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
'வலிமை' படத்தின் முக்கிய சண்டைக் காட்சி மட்டும் படமாக வேண்டும் என்கிறார்கள். அதைப் படமாக்கிய பின்னர்தான் படத்தின் வெளியீடு எப்போது எனத் தெரிய வரும். அந்தக் காட்சி இல்லாமல் கூட படத்தை சீக்கிரமே வெளியிட்டுவிட மாட்டார்களா என்றுதான் அஜித் ரசிகர்கள் யோசிக்கிறார்கள்.
தியேட்டர்களைத் திறக்க எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும். அதன்பின் படம் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த வருடம் கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம்தான் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைத்தது.
அது போல இந்த வருடம் கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு 'வலிமை' படம் மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள்.