''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தல என்று தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் 50வது பிறந்த நாள் இன்று. கோடிக் கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் எப்படி சினிமாவுக்கு வந்தார், சினிமாவில் எப்படி அவர் வளர்ந்தார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரைப்பற்றி அறியாத விஷயங்களை தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
அஜித்தை பற்றி யாரும் ஒரு குறைகூட சொல்ல முடியாது. என்றாலும் அவரை பற்றிய ஒரு குறை மட்டும் எல்லோரிடமும் உண்டு. அது அவர் பொது வெளிக்கு வருவதில்லை. மக்களை, ரசிகர்களை சந்திப்பதில்லை என்பதுதான். அது ஏன் என்பதற்கான பதில் இது.
ரசிகர் மன்றம் கலைப்பு
ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக பெரிய ரசிகர் மன்றம் அஜித்துக்கு இருந்தது. மக்களுக்கு நல்லது செய்யவும், அவர்களுக்கு உதவவும் தான் அவர் ரசிகர் மன்றம் வைக்க அனுமதி அளித்தார். ஆனால் நடந்தது வேறு. சின்ன சின்ன ஊர்களில் கூட அஜித் ரசிகர் மன்றம் தொடங்கி போர்டு வைத்துக் கொள்வதும். விஜய் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதலை கடைப்பிடிப்பதுமாய் ரசிகர்கள் இருந்தார்கள். தங்களை பிடிக்காதவர்களுடன் மோதுவதற்கான அடையாளமாக ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தார்கள்.
நகர்புறங்களில் உள்ள ரசிகர் மன்றத்தினர் ரியல் எஸ்டேட் தொழில். அரசியல்வாதிகளுடன் தொடர்பு. சங்க போஸ்டிங்கிற்கு பணம் பெறுதல் என தங்கள் போக்கை சில ரசிகர்கள் மாற்றினார்கள். தனது பெயரால் இதுபோன்ற விஷயங்கள் நடப்பதை அஜித் விரும்பவில்லை. மாறாக தனது படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் செய்யும் அலப்பறைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் அவர் மன்றத்தை கலைத்தார்.
விழாக்களை புறக்கணிப்பது ஏன்?
அஜித் ஒரு காலத்தில் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு தான் இருந்தார். ஒரு முறை அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட அஜித் "தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த விழாவுக்கு என்னை மிரட்டி அழைத்தார்கள்" என மேடையிலேயே துணிச்சலுடன் பேசினார். இதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு அஜித் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டார் என அப்போது பேச்சுக்கள் எழுந்தன. அதற்கு விளக்கம் அளித்த அஜித் அதன்பிறகு தான் உண்மையை பேசிவிடுவதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கைவிட்டார். தவிர்க்க முடியாமல் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேர்ந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பி விடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்.
பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?
அஜித் போன்று பத்திரிகையாளருக்கு நெருக்கமான நடிகர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு பத்திரிகையாளர்களை அண்ணா என்றும் பாஸ் என்றும் செல்லமாக அழைப்பார். தனது ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து வழங்கி மகிழ்வார்.
கடைசியாக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மனம் நோகும்படியாக சில சம்பவங்கள் நடந்தது. இதிலிருந்து பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தார். என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு உதவி வந்தார். கொரோனா காலத்தில் திரைப்பட பத்திரிகையாளர் சங்கங்களுக்கு கணிசமான நிதி உதவி செய்தார்.
அஜித்தின் விளக்கம்
"என் படம் நன்றாக இருந்தால் மக்கள் பார்த்து ஆதரிப்பாளர்கள், இல்லாவிட்டால் புறக்கணிப்பார்கள். இரண்டையும் நான் சந்தித்திருக்கிறேன். என் ரசிகர்கள் என்ற போர்வையில் பெற்றவர்களை கவனிக்காமல் குடும்பத்தை பற்றி யோசிக்காமல் போஸ்டர் ஒட்டுவதையும், கொடி பிடிப்பதையும் நான் விரும்பவில்லை. எனது புகழ் வெளிச்சம் என் குடும்பத்தின் மீது விழ வேண்டாம். என் குழந்தைகள் எல்லா குழந்தைகளையும் போன்று சுந்திரமாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.
பத்திரிகையாளர்கள் என் மதிப்புக்குரியவர்கள். அவர்களையும், அவர்கள் எழுத்துக்களையும் நான் எப்போதும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். எல்லா தொழிலையும் போன்று சினிமாவில் நடிப்பதும் ஒரு தொழில் அதெற்கென்று சிறப்பு என்று எதுவும் இல்லை" என்று அஜித் தன் நிலைப்பாடு குறித்து அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறார்.
தல அஜித் உண்மையிலேயே வித்தியாசமான மனிதர்தான்.