23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார். சில படங்களில் நடித்தும், படங்கள் தயாரித்தும் உள்ளார். சமீபத்தில் பா.ஜ., கட்சியில் இணைந்து, தேர்தல் சமயங்களில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ராம்குமார் வெளியிட்ட அறிக்கை : நடிகர் திலகத்தின் ஆசியுடனும், இறைவன் அருளுடனும் பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேன். என்னுடன் பிரச்சாரத்தில் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள், நண்பர்களுக்கு நன்றி. கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21 நடிகர் திலகத்தின் நினைவுதினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.