'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
வழக்கு எண் 18, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் முழுமையாக சினிமாவை விடவில்லை. நல்ல படங்கள் வந்தால் நடிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் கொரோனாவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் உள்ளேன், ஆனால் சீக்கிரம் குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைக்கு மோசமாக இல்லை. லேசாக மூச்சுத்திணறல் மட்டும் உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை பெறுகிறேன். இந்த நோயை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என பதிவிட்டுள்ளார் மனிஷா.