'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தென்னிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமா பிரபலங்கள் பலருக்கும், கலைஞர்களுக்கும் கொரோனா தொற்று அடுத்தடுத்து பரவி வருகிறது. பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் பிரபாஸின் தனிப்பட்ட மேக்கப் கலைஞர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம் பிரபாஸ்.
அதனால் அவர் நடிக்க வேண்டிய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் அடுத்து 'ராதே ஷ்யாம்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் நடிக்க வேண்டுமாம். அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியில் வந்த பிறகே படப்பிடிப்பைப் பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.
தெலுங்கில் ஏற்கெனவே சில முக்கிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.