‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

கொரோனா பரவல் காரணமாக பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. தென்னிந்தியத் திரையுலகத்தின் முக்கிய படப்பிடிப்பு நகரமாக ஐதராபாத் நகரம் இருந்து வருகிறது. அங்கு தமிழ், கன்னடப் படங்களின் படப்பிடிப்புகளும் அதிகம் நடக்கும்.
கொரோனா பரவல் காரணமாக 50 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என தெலுங்கு பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அறிவித்துள்ளது. அதோடு கொரோனா பரவல் பயம் காரணமாக மகேஷ்பாபு நடித்து வந்த 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடித்து வந்த 'ஆச்சார்யா' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தற்போது ராஜமவுலி இயக்கி வரும் பிரம்மாண்டப் படைப்பான 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பும் இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஆரம்பமாகி நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா, தொடர்ந்து நடைபெறுகிறதா என படக்குழு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வரும் விஜய் படத்தின் படப்பிடிப்புக் குழுவினர் இருவருக்கும் கொரானோ தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் வேகம் என்பதால் சினிமா படப்பிடிப்புகள் விரைவில் முழுவதுமாக நிறுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.