ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடுமையாகி வரும் நிலையில் நேற்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், சினிமா தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெறவில்லை. அதோடு மாலை நேரக் காட்சிகளும் நடைபெற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மாநகரம், நகரங்களில் மாலை நேரக் காட்சிகள் மாலை 6.30 மணி அல்லது இரவு 7.30 மணிக்கே ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் போது படம் முடிவடைய இரவு 9.30 அல்லது 10 மணி ஆகிவிடும். அதற்கு மேல் படம் பார்க்க வருபவர்கள் தற்போதைய ஊரடங்கு இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. அதனால் மாலை நேரக் காட்சிகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
காலை காட்சியை 10 மணிக்கும், மதியக் காட்சியை 2 மணிக்கும் மாலைக் காட்சியை 6 மணிக்கும் முன்பாக ஆரம்பித்தால் தான் இரவு வீடு திரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இன்று முதல் தியேட்டர்களில் காட்சிகளை மாற்றியமைப்பார்களா அல்லது இரண்டு காட்சிகளே போதும் என்ற முடிவுக்கு வருவார்களா என்பது இன்று தான் தெரியும்.
நேற்றே தியேட்டர்களில் மக்கள் வருகை குறைந்துவிட்டது என்கிறார்கள். தியேட்டர்களைத் திறக்க சங்கத்தினர் முடிவு செய்தாலும் மக்கள் வந்தால் தான் திறந்து வைக்க முடியும். அவர்கள் வரவில்லை என்றாலும் பழையபடியே காட்சிகளை ரத்து செய்யத்தான் வேண்டும். கொரோனா காரணமாக மற்ற தொழில்களை விட சினிமாத் தொழில்தான் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.