காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? |
கொரோனாவின் அடுத்த பரவல் முன்பைக் காட்டிலும் தீவிரமாக இருந்து வருகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது கடந்த பத்து நாட்களுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டது.
படப்பிடிப்புகளை சமூக இடைவெளியுடன், தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்வதும், தகுந்த சோதனைகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் படப்பிடிப்புகள் அதிகமாக நடக்கும் ஐதராபாத்தில் பல முக்கிய படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', வெங்கடேஷ் நடிக்கும் 'எப் 3' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரஜினிகாந்த் நடக்கும் தமிழ்ப் படமான 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு அங்கு பத்து நாட்களுக்கு முன்பு ஆரம்பமானது. அப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்றார் ரஜினிகாந்த். தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு பற்றிய நிலவரம் வெளியாகவில்லை. படக்குழுவினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் அந்தத் தகவல் இன்னும் 'லீக்' ஆகவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. படக்குழுவினர் சிலருக்கு கொரானோ தொற்று பரவியது. ரஜினிகாந்த்திற்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு குழுவினர் சென்னை திரும்பினார்கள். பின்னர் சென்னையில் தான் படப்பிடிப்பு நடந்தது.
தற்போது மீண்டும் ஐதராபாத்தில் கொரானோ பரவல் பாதிப்பு இருப்பதால் 'அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் ரத்து செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.