'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். தமிழில் மட்டுமே அதிகப் படங்களை இயக்கியுள்ளார். அவருக்கும் பான்-இந்தியா அளவில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
தமிழில் தற்போது அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படம் அப்படியே நின்றிருந்தாலும், அதைத் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தியில் அடுத்தடுத்து படங்களை இயக்கப் போய்விட்டார்.
அவர் தமிழில் இயக்கிய 'அந்நியன்' படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க ரீமேக் செய்ய உள்ளார். அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தமிழில் அப்படத்தைத் தயாரித்த ஆஸ்கர் நிறுவனம் படத்தின் கதை உரிமை தங்கள் வசம்தான் இருக்கிறது, ஷங்கர் அதே கதையை ஹிந்தியில் ரீமேக் செய்யக் கூடாது என்றது. ஆனால், கதையை எழுதியது தான்தான் உரிமை தன்னிடமே உள்ளது என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷங்கர் பதிலளித்தார்.
அது பற்றிய சர்ச்சை இன்னும் தொடர்ந்தாலும் 'அந்நியன்' ஹிந்தி பட ரீமேக் வேலைகளை ஷங்கர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறாராம். தற்போது படத்தின் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானியுடன் பேசி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2022ம் ஆண்டில்தான் இந்தப் படம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாக உள்ளது என்றாலும் அடுத்து ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஹிந்திப் பட ஆரம்பக் கட்ட வேலைகளை முடித்துவிட ஷங்கர் தீர்மானித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.