Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா

17 ஏப், 2021 - 21:24 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-condolence-to-Actor-Vivek

மறைந்த நடிகர் விவேக்கிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நடிகர் விவேக்கின் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் காலையில் இருந்து இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனது அழிந்துவிட்டது. காரணம் நடிகர் விவேக் என் மீது மிகுந்த மரியாதையும், அளவற்ற அன்பும், அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே அவர் எனது ரசிகராக இருந்துள்ளார். பின்னால் அபிமானியாக மாறி, பின்னாளில் பக்தராக மாறக்கூடிய அளவுக்கு என்னை நேசித்துள்ளார். சமீபத்தில் கூட என்னை வந்து பார்த்துவிட்டு சென்றார். அவர் என்னென்ன பண்றார் என்பதை என்னிடம் சொல்வார். நானும் அவரை ஊக்கப்படுத்தி அவருக்கு உறுதுணையாக இருந்தேன். எனக்கு தெரிந்த யுக்திகளை கூறுவேன்.

சமீபத்தில் கூட என்னை ஸ்டுடியோவில் வந்து பார்த்துவிட்டு சில வேலைகளுக்காக என்னிடம் அனுமதி வாங்கி சென்றார். அவரின் அன்பையும், அபிமானத்தையும் இன்னொரு ரசிகனிடம் நான் பார்க்க முடியுமா என தெரியவில்லை. எல்லோரும் அவரின் மறைவில் துக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுக்க முடியாது. அதேப்போன்று என் துக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க முடியாது. அவரவர் துக்கம் அவரவருக்கு தான். நடிகர் விவேக்கின் குடும்பமே என் மீது பாசம் வைத்திருந்தது. அவரின் மறைவு எல்லோருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியது போன்று அவரது குடும்பத்தினருக்கும் அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த துக்கத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும் என்றும், விவேக்கின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன். விவேக்கின் குடும்பத்திற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்புமரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி ... 'அந்நியன்' ஹிந்தி ரீமேக் ஷங்கர் சுறுசுறுப்பு : கியாரா அத்வானி நாயகி 'அந்நியன்' ஹிந்தி ரீமேக் ஷங்கர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ilango S -  ( Posted via: Dinamalar Android App )
18 ஏப், 2021 - 17:25 Report Abuse
Ilango S அஞ்சலியிலும் தற்பெருமை.விவேக்கின் நடிப்பையோ சமூக சேவையையோ பாராட்டவில்லை.தலைக்கனம்.
Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,ஐக்கிய அரபு நாடுகள்
21 ஏப், 2021 - 05:06Report Abuse
குறையொன்றுமில்லைதம்பி அப்படி சொன்ன எப்படி ? அஞ்சலி என்பது அவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பை வைத்து சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் உறவு ஓர் ஆசிரியன் மாணவன் போல இருந்திருக்கிறது அதனால் அஞ்சலி அவ்வாறு வந்திருக்கிறது. விவேக் ஒரு சிறந்த பண்பாளர், அவர் இளையராசா சாரிடம் இப்படி தான் பழகியிருக்க முடியும். யாரையும் குறைத்து மதிப்பிட வேணாம். இருவருடன் ஒப்பிட்டால் நாம் ஒரு படி கிழே நிற்பவர்களாகவே இருப்போம். விவேக் சார் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கலாம்...
Rate this:
Santhiran - Kuala Lumpur,மலேஷியா
21 ஏப், 2021 - 07:06Report Abuse
SanthiranBro Illango S This is not right time about Illiaraja Illiaraja just share about Vivek close past relationship with him. Why bro our job to continue condemn others? Or waiting for him?Please bro...
Rate this:
Ilango S -  ( Posted via: Dinamalar Android App )
18 ஏப், 2021 - 03:48 Report Abuse
Ilango S Ilango S
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in