நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. அவர் தெலுங்கில் நடித்துள்ள 'வக்கீல் சாப்' படம் நாளை வெளியாக உள்ளது. அப்படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகையான நிவேதா தாமஸ் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஞ்சலியும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அஞ்சலி. “எனது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களும், அன்பான ரசிகர்களுக்கும், எனக்கு கொரானோ பாதிப்பு இல்லை, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குக் கொரானோ என சில செய்திகள், இணையதங்களில் வெளிவந்துள்ளன என்பது என் கவனத்திற்கு வந்துள்ளது. எனக்கு கொரானோ பாசிட்டிவ் என்பது முற்றிலும் தவறான ஒரு தகவல். நான் முற்றிலும் நலமாகவும், பாதுகாப்பாகவும், உள்ளேன். நீங்களும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.