ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, தயாரித்து, இசையமைத்துள்ள படம் 99 சாங்ஸ். எஹான் பட், எடில்ஸி நடிக்க, விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். இப்படம் தொடர்பாக போட்டி ஒன்றை ரஹ்மான் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை ரசிகர்கள் தேர்ந்தெடுத்து, அதை அவர்கள் பாடி பதிவு செய்து அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.
போட்டியில் பங்கேற்பவர்கள், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடலை பதிவு செய்து, அதை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar எனும் ஹேஷ்டாகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். ரஹ்மானையும் (@arrahman) அவர்கள் டேக் செய்ய வேண்டும்.
பத்து வெற்றியாளர்கள் ஏ ஆர் ரஹ்மானையும், 99 சாங்ஸ் குழுவினரையும் காணொலி மூலம் சந்தித்து உரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். அதோடு, ஒரு வெற்றியாளருக்கு ஏ ஆர் ரஹ்மானோடு இணைந்து பணியாற்றும் மாபெரும் வாய்ப்பு வழங்கப்படும்.