Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் ஒரு வாரிசு இயக்குனரை அறிமுகப்படுத்தும் துல்கர் சல்மான்'

07 ஏப், 2021 - 19:29 IST
எழுத்தின் அளவு:
Dulquer-Salman-to-debut-one-more-director-in-his-production

மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனர் வரிசையில் முதலிடம் பிடித்தவர் இயக்குனர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி என முன்னனி நடிகர்களை மட்டும் வைத்தே, கிட்டத்தட்ட நூறு படங்களை இயக்கிய ஜோஷி, மலையாள சினிமாவின் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து 'டிவென்ட்-20' என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். இந்தநிலையில் ஜோஷியின் மகன் அபிலாஷும் தந்தை வழியில் இயக்குனராக களம் இறங்குகிறார்.

நடிகர் துல்கர் சல்மான் இவரது டைரக்சனில் நடிப்பதுடன், அந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் என்பவரை, கடந்த வருடம் தான் தயாரித்து, நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு'' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி இருந்தார் துல்கர்.. இயக்குனர்கள் ஜோஷி, சத்யன் அந்திகாடு போன்றவர்கள் எல்லாம் துல்கரின் தந்தையான மம்முட்டியின் ஆரம்ப கால வளர்ச்சியில் அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் இயக்கும் பாரோஸ் : முக்கிய வேடத்தில் பிரித்விராஜ்மோகன்லால் இயக்கும் பாரோஸ் : முக்கிய ... இன்று போலீஸ்.. நாளை நீதிபதி ; இருமுகம் காட்டும் குஞ்சாக்கோ இன்று போலீஸ்.. நாளை நீதிபதி ; இருமுகம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in