Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் சைக்கிள், அஜித்தின் மாஸ்க் நிறங்கள் : இதன் பின்னணியில் இப்படி ஒரு அரசியலா?

06 ஏப், 2021 - 22:22 IST
எழுத்தின் அளவு:
Behind-politics-in-Vijay,-Ajith-symbolic-code

சென்னை: காலாகாலமாக குறியீடுகள் மூலம் தங்கள் கருத்துக்களை உணர்த்த உலக அளவில் அரசியல் தலைவர்கள் பலர் முயற்சி மேற்கொள்வர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வரை பலர் தங்கள் உடைகள், வாகனங்கள், அணியும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றில் குறியீட்டு அரசியல் செய்வது வழக்கம்.

குறியீட்டு அரசியலுக்கு மிகவும் பிரபலமானவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தான் அணியும் வித்தியாசமான சாக்ஸ் மூலமாக அவ்வப்போது அரசியலை வெளிப்படுத்துவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்திருந்தார்.

அப்போது கனடாவில் நிலவி வரும் காலிஸ்தான் விவகாரத்தை விளக்கும் ஓவியம் கொண்ட சாக்ஸ் அணிந்திருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதேபோல தனது வித்தியாசமான சாக்ஸ் மூலமாக உலக அரசியல் குறியீடுகளை அவர் வெளிப்படுத்துவது வாடிக்கை.




தற்போது தமிழ் சினிமா நடிகர்களும் இந்த குறியீட்டு அரசியல் கோதாவில் இறங்கி விட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இன்று காலை மனைவி ஷாலினியுடன் வாக்கு பதிவு செய்ய நடிகர் அஜித் வந்திருந்தபோது அவர் அணிந்திருந்த மாஸ்க் தற்போது பேசுபொருளாக உள்ளது. கருப்பும் சிவப்பும் கலந்த அவர் மாஸ்க் அணிந்து இருந்தார். இதனால் திமுகவுக்கு அவர் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் வாக்கு செலுத்த நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்றது காலை முதலே வைரலாகி வருகிறது. இவரது சைக்கிளில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறம் இருந்தது. இதன் காரணமாக விஜயம் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.




இதுபோன்ற குறியீடுகளை இந்த நடிகர்கள் நிஜமாகவே வைத்து இருந்தார்களா அல்லது தற்செயலாக இவை அமைந்தது என யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் பொதுவாகவே ஒரு பாணி கையாளப்படுகிறது. குறிப்பிட்ட பிரபலங்கள் அணியும் டீ சர்ட் முதல் ஷூ வரை அனைத்திலும் குறியீடு கண்டுபிடிப்பது நெட்டிசன்களின் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது.

ஆனால் இதில் பரிதாபமான உண்மை என்னவென்றால் பெரும்பாலான பிரபலங்கள் இயல்பாக ஆடைகளை அணிந்து வெளியே செல்கின்றனர். தற்செயலாக இது ஒரு கட்சியின் கொடி நிறத்தில் இருந்தால், உடனே அந்த குறிப்பிட்ட பிரபலம் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒருவருக்கும் ஒரு லாபமும் இல்லை என்பது தெளிவாகிறது.




பொன்வண்ணன் வரைந்த அரசியல் ஓவியம்
இதுஒரு புறமிருக்க, விஜய் வந்த சைக்கிள் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்தது. அதேபோல், அஜித் அணிந்திருந்த முககவசமும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்தது. இதை ஒப்பிட்டு நடிகர் பொன்வண்ணன் ஓவியம் ஒன்றை வரைந்து டுவிட்டரில் பதிவிட்டார். அதை பார்த்த பலரும், ‛விஜய்யும், அஜித்தும் தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்துள்ளதை மறைமுகமாக கூற வருகிறீர்களா? என பொன்வண்ணனிடம் கேள்வி எழுப்பினர்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவிலிருந்து மீண்ட லோகேஷ் கனகராஜ்கொரோனாவிலிருந்து மீண்ட லோகேஷ் ... ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் திடீர் மரணம் ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் திடீர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

08 ஏப், 2021 - 15:26 Report Abuse
தமிழ் பக்கத்து மாநிலம் கேரளாவில் மோகன்லால் ஓட்டு போட வந்தாலும் எவனும் கண்டுக்க மாட்டான்... நம்ம ஆளுங்க கருணாஸ் வந்தாலும் ஓடுவானுக
Rate this:
nsathasivan - chennai,இந்தியா
07 ஏப், 2021 - 16:42 Report Abuse
nsathasivan உண்மையில் இவர் மக்களுக்காக ஒரு தூசி துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பாரா? கேவலமான பப்ளிசிட்டிக்காக கொரானா காலத்தில் சைக்கிளில் வந்து இப்படி ஒரு ஸ்டண்ட் தேவையா? தூத்தூ.
Rate this:
nsathasivan - chennai,இந்தியா
07 ஏப், 2021 - 10:28 Report Abuse
nsathasivan கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு அப்பாவி ரசிகர்களை ஏமாற்ற சைக்கிளில் வலம் வந்து ஒரு ஸ்டண்ட் தேவையா? தூத்தூ.
Rate this:
mohan - chennai,இந்தியா
07 ஏப், 2021 - 12:35Report Abuse
mohanசரியாக சொன்னீர்கள் சதாசிவம் நாட்ல எவ்ளோவோ பிரச்சினை இருக்கு ? கொரானாவுல எப்போ லோக்கடவுன் போடுவான் அவனானவன் பீதியில் இருக்கான் ? இதுல இவரு வேற (விஜய்) சைக்கிள் வந்து காமெடி பண்ணிட்டு இருக்கறாரு ? இந்த கொரநா காலத்துல இந்த வீண் விளம்பரம் தேவையா ? என்ன கொடுமை சதாசிவம் ?சரியான காமெடி பீஸ் ?...
Rate this:
Narayanan.S - Chennai,இந்தியா
07 ஏப், 2021 - 09:31 Report Abuse
Narayanan.S வரும் போது சைக்கிள் போகும் போதும் சைக்கிள்னா ஓரு அர்த்தம் மட்டும் வரும். இல்லைன்னா டபுள் கேம்தான். அஜீத் வெள்ளை கலரா இருக்குறது அவர் குத்தம் இல்ல. மாஸ்க் கலரை மட்டும் பாக்க வச்சு அதுல சூரிய சிவப்பை கொஞ்சூண்டு சும்மா ஒப்புக்கு முட்டு கொடுக்க மாட்டி இருந்தார் பாருங்க. அத்தனையும் முக்கியம் யுவர் ஹானர். சே எப்ப திருந்துவனோ?
Rate this:
Kalyanaraman - Chennai,இந்தியா
07 ஏப், 2021 - 09:04 Report Abuse
Kalyanaraman கடந்த திமுக ஆட்சியில் திறைத்துறையை பலவந்தமாக அடைமைப்படுத்தியது. "எதற்கும் இருக்கட்டும்" என்று கருதியே இப்படி அமைந்திருக்கலாம். மீண்டும் திமுக ஆட்சி வந்தால் திரைத்துறை மிக மிக மோசமான நிலைக்கு செல்லும். மேலும் ஒடிடி திரை வெளியீடு அதிகமாகும்.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in