2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தவர், 2017ம் ஆண்டு முஸ்தபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரியாமணி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் 'கொட்டேஷன் கேங்க்' படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார்.
மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளதால், சமூகவலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் பிரியாமணி. சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வரும் அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இதனால் கலவையான விமர்சனங்களையும், கேள்விகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், 'தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா?' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரியாமணி, 'என் கணவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன்' என நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு ரசிகர், 'உங்களது நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள்' என பிரியாமணியிடம் ஆபாசமாகக் கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த பிரியாமணி, 'முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அவர்களது புகைப்படத்தை பதிவிட்டால், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன்' என பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியாமணியின் இந்தப் பதிலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.