நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில், பிரபல மலையாள நடிகரான மம்முட்டி, வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் தளபதி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். நட்பின் அருமையைப் பேசும் அந்தப் படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தார்கள்.
அதை வைத்து தளபதி பட பாணியில் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” எனப் பதிவிட்டுள்ளார்.