அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

‛மாஸ்டர்' படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இது இவரின் 65வது படமாகும். இப்படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தானாவிடம் பேசி வந்தனர். இப்போது பூஜா நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமான பூஜா, அப்பட தோல்வியில் பிறமொழிகளில் நடித்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியிருக்கும் அவருக்கு மீண்டும் தமிழில் விஜய் பட வாய்ப்பு வந்துள்ளது. தமிழில் கிடைத்த முதல் தோல்வியை இப்படம் மூலம் சரி செய்வார் என நம்பலாம்.




