தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'காடன்'.. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் மும்மொழிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் தெலுங்கில் 'ஆரண்யா' என்றும் இந்தியில் 'ஹாத்தி மேரே சாத்தி' என்கிற பெயரிலும் வரும் மார்ச்-26 அன்று ஒரே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்தி பதிப்பான 'ஹாத்தி மேரே சாத்தி'யின் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அம்மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவு போட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒருபக்கம், கொரோன அச்சத்தால் தியேட்டருக்கு மக்கள் வர அஞ்சுவது இன்னொரு பக்கம் என, இந்த சமயத்தில், 'ஹாத்தி மேரே சாத்தி' வெளியானால் மிகப்பெரிய வசூல் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இதன் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அதேசமயம் தமிழ் மற்றும் தெலுங்கில், ஏற்கனவே அறிவித்த தேதியில் (மார்ச்-26) இந்தப்படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை.