நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் தான் தென்னிந்தியத் திரையுலகில் யு டியூபில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள பாடலாக இருக்கிறது. அப்படத்தின் சாதனையை வெகு சீக்கிரத்தில் வேறு எந்த ஒரு பாடலும் பிடித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
'ரவுடி பேபி' பாடலின் அதீத வரவேற்புக்குக் காரணம் தனுஷ் நடனமா, சாய் பல்லவி நடனமா என அந்தப் பாடல் வந்ததிலிருந்தே கேள்வி இருந்து வருகிறது. இருவருமே சிறப்பாக நடனமாடியதும், துள்ளல் இசையும் தான் அப்பாடலின் வெற்றிக்குக் காரணமாக உள்ளது.
கடந்த மாதத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்தின் 'கண்டா வரச் சொல்லுங்க' பாடலும், சாய் பல்லவி நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் 'சாரங்க தரியா' பாடலும் பத்து நாட்கள் இடைவெளியில் யு டியூபில் வெளியானது. இரண்டு பாடல்களுமே நாட்டுப்புறப் பாடலாக இருப்பது ஒரு ஒற்றுமை.
இந்த இரண்டு பாடல்களில் 'சாரங்க தரியா' பாடல் 'கண்டா வரச் சொல்லுங்க' பாடலை விட இரண்டு மடங்கு அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் சாய் பல்லவி. இத்தனைக்கும் பாடலில் சில இடங்களில் தான் அவருடைய நடனம் காட்டப்படுகிறது. அதற்கே இத்தனை பார்வைகளைக் கொடுத்துவிட்டார்கள் ரசிகர்கள்.
'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் 20 மில்லியன் பார்வைகளையும், 'சாரங்க தரியா' 62 மில்லியன் பார்வைகளையும் தற்போது கடந்துள்ளது. சமீபத்தில் வெளியான பல பாடல்களில் இந்த இரண்டு படங்களின் நாட்டுப்புறப் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று.