‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்தப்படியாக விஜய் சேதுபதியின் 46ஆவது படத்தை இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், இப்படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார் என்பதற்கு அடையாளமாக போலீஸ் தொடர்பான வாகனம், தொப்பி, லத்தி, பதக்கம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன. அதோடு ஒரு பட்டாக்கத்தியையும் காண்பிக்கிறார்கள்.
கடந்த பிறந்தநாளின்போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கினார் விஜய் சேதுபதி. அப்போது அதற்கு விளக்கமாக பொன்ராம் இயக்கும் படத்தின் கதையில் ஒரு பட்டாக்கத்தி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் அதை வைத்து கேக் வெட்டினேன் என்று அப்போது தெரிவித்து இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
சேதுபதி, செக்கச் சிவந்த வானம் படங்களுக்கு பின் மீண்டும் இந்தப்படத்தில் போலீசாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.




