பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! |
சண்டைக்கோழி 2 மற்றும் செக்கச் சிவந்த வானம் படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்த அப்பாணி சரத், ஜீ தமிழில் வெளியான ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் புகழ்பெற்றார். தற்போது ஆரி நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரும் சிகாமணி மற்றும் சகலகலாசலா போன்ற திரைப்படங்களை இயக்கியவருமான வினோத் குருவாயூர் இயக்குகிறார். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டி மீடியா தயாரிக்கிறது.
படம் குறித்து இயக்குனர் வினோத் குருவாயூர் கூறியதாவது: தமிழ்நாடு, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழ் திரைப்படம் இயக்க வேண்டும் எனும் எனது கனவு தற்போது நிறைவேறி உள்ளது. தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. அது குறித்து நன்கு ஆராய்ந்து இந்த படத்தை உருவாக்குகிறோம் படப்பிடிப்பு மே 15 அன்று தொடங்குகிறது. என்றார்.