'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரகதி. அதன்பிறகு பெரிய மருது, வாழ்க ஜனநாயகம், சிலம்பாட்டம், ஜெயம், உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெண், வம்சம், அரண்மணைகிளி போன்ற தொடர்களிலும் நடித்து வருகிறார்.
44 வயதாகும் பிரகதி சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயக்குகிறவர். தற்போது தான் வசிக்கும் பகுதியில் சேலை கட்டிக்கொண்டு புல்லட் ஓட்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுடன் "முடிவை நம்புங்கள், முன்னேற்றம் காண்பீர்கள்" என்று நடைபெறும் சட்டசபை தேர்தல் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.