ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்திருக்க வேண்டிய 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற ஏப்ரல் 25ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த விழாவில் 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த காதசிரியர் உள்ளபட 10 பிரிவுகளில் டேவிட் பின்சரின் மான்க் திரைப்படம் போட்டியிடுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தில் கேரி ஓல்ட்மேன், அமாண்டா சேப்ரீட், லில்லி காலின்ஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கருப்பு வெள்ளையில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கதை 1930களில் நடப்பதால் அதன் உயிரோட்டம் கெடாமல் இருக்க கருப்பு வெள்ளையில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு சினிமா இயக்குனருக்கும், முன்னணி நடிகைக்குமான கதை இது.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் பிளாக் பாந்தராக நடித்த சட்விக் போஸ்மேன் கடந்த ஆண்டு, புற்று நோயால் மரணம் அடைந்தார். அவர் நடித்து கடைசியாக வெளியான பிளாக் பாட்டம் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுகிறது. சிறந்த நடிகருக்கான விருது சட்விக் போஸ்மேனுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மன்க் படத்திற்கு குறைந்தது 6 விருதுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.